» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை விடுதியில் விஷம் குடித்த பயிற்சி பெண் டாக்டர் சாவு

சனி 14, டிசம்பர் 2024 12:39:22 PM (IST)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை விடுதியில் விஷம் குடித்த பயிற்சி பெண் டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மருத்துவம் படித்து வருகிறார்கள். படிப்பை நிறைவு செய்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த இலங்கை வேந்தன் மகள் சாருமதி (22) என்பவர் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

கடந்த 9-ந் தேதி சாருமதி மருத்துவமனையில் உள்ள விடுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயிற்சி டாக்டர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் மயங்கி கிடந்த பயிற்சி டாக்டரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுபற்றி சாருமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சாருமதியின் தந்தை இலங்கை வேந்தன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் சாருமதியை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சாருமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பயிற்சி டாக்டர் சாருமதி மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் மன அழுத்தம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory