» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றிற்கு 75000 கனஅடி வெள்ள நீர் வருகிறது : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளி 13, டிசம்பர் 2024 3:49:37 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு 3 முதல் 4 மணி நேரங்களில் 75000 கனஅடி வெள்ள நீர் வர வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் நிவாரணம் முகாம்களில் தங்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து 26000 கனஅடியாக உள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணமாக 55000 கனஅடி தண்ணீர் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் வந்து கொண்டிருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. மேற்படி 55000 கனஅடி தண்ணீரானது தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்னும் 3 முதல் 4 மணி நேரங்களில் வந்தடைய வாய்ப்புள்ளது. 

மேலும், இந்த நீரானது திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு வர 5 மணி நேரமாகும் மற்றும் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சித்தாறு பகுதியிலிருந்து 20000 கனஅடியானது வந்தடைய வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் 75000 கனஅடி வெள்ள நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு வர வாய்ப்புள்ளது. எனவே, ஆபத்தான சூழ்நிலை காரணமாக திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளான கலியாவூர், அகரம், முத்தாலங்குறிச்சி, ஆராம்பண்ணை, முறப்பநாடு, கோவில்பத்து, ஆழிக்குடி, பொன்னங்குறிச்சி, ஆழ்வார்தோப்பு, புதுக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல, ஏரல் வட்டத்தில் உள்ள கீழ்பிடாகை கஸ்பா, மங்கலக்குறிச்சி, ஏரல் பேரூராட்சி, உமரிக்காடு, முக்காணி, பழையகாயல், புல்லாவெளி, ஆதிநாதபுரம், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், கேம்பலாபாத், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, பால்குளம், இராஜபதி, வாழவல்லான், சேதுக்குவாய்த்தான், குருகாட்டூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை கருத்திற்கொண்டு மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து நிவாரணம் முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Dec 13, 2024 - 07:37:36 PM | Posted IP 162.1*****

காரணம் குளங்கள் எல்லாம் ஆக்கிரமித்து விட்டார்கள்

தூத்துக்குடியான்Dec 13, 2024 - 05:47:15 PM | Posted IP 162.1*****

எவ்ளோ மழை பெஞ்சாலும் ரெண்டு நாள் பேசிட்டு எல்லாத்தையும் மறந்துட்டு போயிடுவோம். மற்றுமொரு அணை தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி தென்காசியில் கட்டினால் மட்டுமே மழைநீர் சரியான முறையில் பயன்படுத்தப்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory