» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2271.60 மிமீ மழை: கோவில்பட்டியில் வெளுத்து வாங்கியது!

வெள்ளி 13, டிசம்பர் 2024 12:54:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2271.60 மிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவில்பட்டியில் 364.70 மி.மீ மழை பெய்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. 

இதில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12.12.24 காலை 6.30 மணி முதல் 13.12.24 காலை 6.30 மணி வரை கடந்த 24 மணி வரை பெய்த மழை பொழிவு குறித்த அளவு விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

தூத்துக்குடியில் 59.50 மி.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 145.50 மி.மீ, திருச்செந்தூரில் 41.10 மி.மீ, காயல்பட்டிணத்தில் 105.00 மி.மீ, குலசேகரப்பட்டினத்தில் 17.00 மி.மீ, சாத்தான்குளத்தில் 64.60 மி.மீ, கோவில்பட்டியில் 364.70 மி.மீ, கழுகுமலையில் 168.00 மி.மீ, கயத்தாறில் 113.00 மி.மீ, கடம்பூரில் 156.00 மி.மீ, எட்டயபுரத்தில் 174.40 மி.மீ, விளாத்திகுளத்தில் 186.00, காடல்குடியில் 121.00 மி.மீ, வைப்பாரில் 169.00 மி.மீ, சூரங்குடியில் 127.00 மி.மீ, ஒட்டப்பிடாரத்தில் 90.10 மி.மீ, மணியாச்சியில் 76.00 மி.மீ, வேடநத்தத்தில் 51.20 மி.மீ, கீழ அரசரடியில் 42.40 மி.மீ என

மொத்தம் 2271.60 மி.மீ மழையும், சாராசரி மழை பொழிவாக 119.56 மி.மீ மழையும் பொழிந்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிக பட்சமாக கோவில்பட்டியில் 364.70 மி.மீ மழையும், குறைந்த பட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 17.00 மி.மீ மழையும் பொழிந்துள்ளது குறிப்பிட தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory