» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு: ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ளி 13, டிசம்பர் 2024 10:46:09 AM (IST)
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரல், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
மக்கள் கருத்து
சக்தி நவீன் முக்காணிDec 14, 2024 - 05:00:37 PM | Posted IP 162.1*****
போன வருஷத்துக்கு இந்த வருஷம் தண்ணி கம்மி மேல உள்ள புதுபாலத்தை சரி செய்ய வேண்டுகிறேன்
Ahamed JafferDec 14, 2024 - 06:05:42 PM | Posted IP 162.1*****