» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
வியாழன் 12, டிசம்பர் 2024 7:10:40 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் மழை வெளுத்து வாங்குகிறது. மேலும், தாமிரபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கலியாவூர் முதல் புன்னக்காயல் ஆற்றங்கரை பகுதிகளில் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் காலைமுதல் லேசான மழை பெய்து வந்தது. தொடா்ந்து மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மேலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உதவி எண் அறிவிப்பு: தூத்துக்குடி மாநகர பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். எந்த உதவிகள் வேண்டுமானாலும் மாநகராட்சி அதிகாரிகளும், அலுவலா்களும், பணியாளா்களும் உடனடியாக செய்து தருவதற்கு தயாராக உள்ளனா் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
MuthurajSep 23, 1734 - 04:30:00 AM | Posted IP 162.1*****
முதல்ல ஏரி குலங்கள ஆளப் படுத்தனும் ஆளப் படுத்துற மண்ணு கரையில் சுத்தி வைக்கணும் அதை வைக்க மாட்டாங்க மண்ணு நல்லா இருந்தா மண்ணை பார்த்து வித்துடுறாங்க இந்த மண்ணள்ளி கரையில் வசித்துனாலே வெள்ளப்பெருக்கு அதிகம் வராது அதை செய்ய மாட்டேங்கிறாங்க மண்ணை வைக்க தான் பாக்குறாங்க ஒரு யார்கிட்ட என்ன சொல்லு
ManiDec 12, 2024 - 07:45:52 PM | Posted IP 172.7*****
இது என்ன ஏரியா
கார்த்திகேயன்Dec 13, 2024 - 06:50:45 PM | Posted IP 172.7*****