» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
வியாழன் 12, டிசம்பர் 2024 5:03:57 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தற்போது இருந்து வானம் இருள் சூழ்ந்த நிலையில் மழை பெய்ய துவங்கி உள்ளது.
இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் "தூத்துக்குடி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மழை எச்சரிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,
மாவட்டம் முழுவதும் கடற்கரை கிராமங்களில் உள்ள 41 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு 3000 முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு குழுவினர் உள்ளிட்டடோர் தயார் நிலையில் இருப்பதாகவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக பல்வேறு 97 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது கால்நடைகளையும் ஆற்றில் இறங்கக்கூடாது என வருவாய் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 639 குளங்களில் 32 குளங்கள் 70% நிரம்பியுள்ள நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் இரண்டு குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது. குளங்களுக்கு வரும் நீரின் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்
BalamuruganDec 13, 2024 - 09:46:54 PM | Posted IP 162.1*****