» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாசிப்பு பெருவிழா போட்டிகள்: பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

சனி 7, டிசம்பர் 2024 5:31:04 PM (IST)



தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான வாசித்தல் திறனை மேம்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது. 

இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்பு (எல்டாய்) பள்ளி மாணவரிடையே வாசிப்பை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா வாசிக்கிறது என்றவொரு இயக்கத்தை இந்த அமைப்பு இந்தியா முழுவதும் நடத்துகிறது. இதன் ஒரு அங்கமாக, ஒரு வாசிப்புப் பெருவிழாவை தூத்துக்குடியில் ஏற்பாடு செய்திருந்தது.ஜிh வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த வாசிப்பு பெருவிழா தூத்துக்குடியில் இன்று (07.12.2024) அன்று நடைபெற்றது.

இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்பும், (ELTAI) அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியும், தூய மரியன்னை கல்லூரியும் இணைந்து இந்தப் பெருவிழாவை நடத்தினர். நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியின் வாயிலாக இந்நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளிக்கப்பபட்டு இவ்விழா நடைபெற்றது.

முன்னதாக, காலையில் வாசிப்பை முன் வைத்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பள்ளிமாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், விரைவாக வாசித்தல், புத்தகத்தைப் பற்றிப் பேசுதல், செய்திவாசிப்பாளர் போல் வாசித்தல், வினாடி வினா ஆகிய போட்டிகளும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் செய்தியைக் கதையாக மாற்றுதல் (ஆங்கிலம் மற்றும் தமிழ்), கதையை மாற்றிச் சித்தரித்தல் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இப்போட்டிகள் தூயமரியன்னைக் கல்லூரியிலும், அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியிலும் நடத்தப்பட்டன. மாலையில் இப்பெருவிழாவின் நிறைவு விழா அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. பேராசிரியர் முனைவா. ரகு அந்தோணி வரவேற்புரை ஆற்றினார். இவ்வாசிப்பு பெருவிழாவின் நோக்கத்தையும், வாசிப்பின் அவசியத்தையும் விளக்கி எல்டாய் அமைப்பின் தலைவர் க.இளங்கோ பேசினார்.

"இந்தியா வாசிக்கிறது” என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை திருநெல்வேலி சரக காவல்த்துறை தலைவர் பா. மூர்த்தி வெளியிட்டார். நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் தலைமைச் செயல் அலுவலர் கே.அனந்த ராமானுஜம் நூலைப் பெற்றுக் கொண்டார். பா.மூர்த்தி, .ஆர்.மனோகரன், கா.இளங்கோ மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவியரின் கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஆனந்த ராமானுஜம் தலைமையுரை ஆற்றினர்.

பெருவிழாவின் சிறப்பு விருந்தினர் பா.மூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில, வாசிப்பு ஏன் அவசியம் என்பதனையும், வாசிப்பினால் ஏற்படும் நன்மைகளையும், பள்ளிப் பருவத்திலேயே வாசிப்பை வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் விவரித்து, வலியுறுத்தி கூறினார்.திண்டுக்கல் ஜீ.டி.என். கல்லூரி ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவரும், திண்டுக்கல் இலக்கியக் கழகத்தின் தலைவருமான ஆர்.மனோகரன் பெருவிழாவை வாழ்த்தி பேசினார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் மாநில கருத்தாளர் ஆல்பர்ட் பர்னான்டோ, தூய மரியன்னைக் கல்லூரியின் முதல்வர் ஜெசி பர்னான்டோ, ஏ.பி.சி. வீரபாகு மேனிலைப் பள்ளியின் முதல்வர் ஜி. கோமதியும், மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர் கே.முருகனும் விழாவை வாழ்த்திப் பேசினர். போட்டிகளில வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா நன்றியுரை ஆற்றினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகளைப் பெற்று அழகர் பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், விகாசா பள்ளிஇ சாயர்புரம் மற்றும் சர்வைட் பள்ளி மறவன்மடம் ஆகிய பள்ளிகள் இரண்டாமிடங்களை பெற்றன இப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் ச.முரளிதரன் கல்லூரி அகில இந்திய ஆங்கிலக் கழகத்தின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளாரும், கல்லூரியின் முதல்வரான அ.ஜாய்சிலின் சர்மிளா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory