» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காசநோய் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்
சனி 7, டிசம்பர் 2024 4:19:20 PM (IST)
தூத்துக்குடியில் காசநோய் இல்லா தமிழ்நாடு - 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காசநோய் இல்லா தமிழ்நாடு - 100 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.