» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இறுமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
சனி 7, டிசம்பர் 2024 3:48:29 PM (IST)
நானும் இறுமாப்போடு சொல்கிறேன்! கட்டுப்பாடோடு பணியாற்றினால் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என கனிமொழி கருணாநிதி எம்.பி பேசினார்.
தி.மு.கழக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டம் இன்று திருச்செந்தூர் IMA மெமோரியல் ஹாலில் இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: இந்த தேர்தல் வெற்றி என்பது உங்களின் கரங்களில் இருக்கிறது என்ற அந்த கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொல்வது போல் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக, நானும் இறுமாப்போடு சொல்கிறேன் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.