» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 5பேர் கைது!
சனி 7, டிசம்பர் 2024 3:25:16 PM (IST)
திருச்செந்தூரில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர்சுந்தரமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் இன்றுதிருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்முகபுரம் ரயில்வே கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் செல்லத்துரை (26), பகவதி மகன் சுடலைகண்ணு (எ) கண்ணன் (34), தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான மாடசாமி மகன்கள் சுப்புராஜ் (எ) டியோராஜ் (25), மாரிலிங்கம் (24), மாரியப்பன் மகன் வள்ளிநாயகம் (24) மற்றும் சிலர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் செல்லத்துரை, சுடலைகண்ணு (எ) கண்ணன், சுப்புராஜ் (எ) டியோராஜ், மாரிலிங்கம் மற்றும் வள்ளிநாயகம் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.