» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜெயலலிதா நினைவு நாள்: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை!
வியாழன் 5, டிசம்பர் 2024 3:49:40 PM (IST)
தூத்துக்குடியில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பும், டூவிபுரம் 5 வது தெரு அண்ணா நகர் சந்திப்பிலும், டூவிபுரத்தில் உள்ள கழக வர்த்தகஅணி அலுவலகத்தின் முன்பும், அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு, அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் திரு சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் PTR ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் பலர் கலந்து காெண்டனர்.