» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எட்டயபுரம், விளாத்திகுளத்தில் ஜெ. நினைவு நாள்: அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!
வியாழன் 5, டிசம்பர் 2024 3:13:34 PM (IST)
விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளத்தில், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையொட்டி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், மாரிமுத்து மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, சாந்தி உட்பட ஏராளமான கட்சியினர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி,சிவா ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம், மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதாDec 5, 2024 - 03:30:55 PM | Posted IP 162.1*****