» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரு மணி நேரத்தில் 23 திருமணங்கள்!
வியாழன் 5, டிசம்பர் 2024 12:56:25 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் இன்று (டிச.5) காலை ஒரு மணி நேரத்தில் 23 திருமணங்கள் நடைபெற்றன.
2024 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் கடைசி சுபமுகூர்த்த நாளான இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் இன்று ஒரு மணி நேரத்தில் 23 திருமணங்கள் நடைபெற்றன.
சங்கர ராமேஸ்வர் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் சுப்பிரமணிய சுவாமி சன்னதி முன்பு 23 திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்களை கோவில் பிரதான பட்டர் குரு நடத்தி வைத்தார். திருமண வீட்டார்களின் கூட்டத்தால், கோவிலில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது.