» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் தளபதி மாற்றத்தை கொண்டு வருவார் : தூத்துக்குடி தவெக நிர்வாகி பேச்சு!
திங்கள் 11, நவம்பர் 2024 4:48:59 PM (IST)
தமிழகத்தில் தளபதி விஜய் மாற்றத்தை கொண்டு வருவார் என தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் முதல் மாநாடு கடந்த மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்தனர். இது தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் இளைஞர்கள் இளம் பெண்களை கட்சியில் இணைக்கும் பணியில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் இளம்பெண்கள் இணைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம்பெண் ஸ்னோலின் தாயார் வனிதா தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து இளைஞர்கள் இளம் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசும்போது "எந்த அரசியல் கட்சி மாநாட்டிலும் இடம்பெறாத ஒன்று பெண் தலைவர்களை முன்னிறுத்தியது தமிழக வெற்றி கழகம் மட்டுமே. தளபதியார் சம வாய்ப்பு சம உரிமை என்பதை செயல் வடிவமாக காட்டி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பூத் கமிட்டியை அமைக்க வேண்டும். தளபதி மாற்றத்தை கொண்டு வருவதற்காக வந்திருக்கிறார் அந்த மாற்றத்தை கொண்டுவதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். மேலும் தனிநபரால் மாற்றத்தை கொண்டு வர முடியாது அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், வரும் 2026 ஆம் ஆண்டு தளபதியார் அரியணை ஏற்றுவது ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி உள்ள 60 வார்டுகளிலும் மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து நமது கட்சியினர் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வார்டுகளாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையே அதிகப்படுத்த வேண்டும் என அஜிதா ஆக்னல் பேசினார்.