» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு!
திங்கள் 11, நவம்பர் 2024 4:13:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 420 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 28 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் லோகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
