» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
திங்கள் 11, நவம்பர் 2024 3:08:41 PM (IST)
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடைபெற்று வரும் புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பிரதான சாலைகளையும் சந்திப்புகளையும் அகலப்படுத்தியும், மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பல புதிய வழித்தடங்களையும் உருவாக்கியும் வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக கணேஷ் நகர் முதல் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நடைபெற்று வரும் புதிய தார் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும், டீச்சர்ஸ் காலனி பகுதியில் நடைபெற்று வரும் ரவுண்டானா மற்றும் வண்ண சின்னங்கள் மற்றும் அதன் அருகே உள்ள பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், வட்ட செயலாளர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.