» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி!
திங்கள் 11, நவம்பர் 2024 10:59:18 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவரங்காடு கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் முருகேசன் (32), இவர் நேற்று அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி சண்முக கனி கொடுத்த புகாரின் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.