» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணி சார்பாக பண்பு பயிற்சி முகாம்
திங்கள் 11, நவம்பர் 2024 10:29:42 AM (IST)
தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பாக ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் சிவத்தையாபுரத்தில் வைத்து நடைபெற்றது
தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பாக ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் சிவத்தையாபுரத்தில் வைத்து 33 சங்கியாக்களுடன் நடைபெற்றது. பிடி கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவன், ஊர் தர்மகத்தா பால்ராஜ், இந்து நாடார் உறவின் சங்கத் தலைவர் மாதவன் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்து முன்னணி தூத்துக்குடி ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கன்னியாகுமரி கோட்டச் செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். குமரி மாவட்ட செயலாளர் பாப்பு சுரேஷ்குமார், தூத்துக்குடி மாநகர மாவட்ட பொறுப்பாளர்கள் இசக்கி முத்துக்குமார், சரவணகுமார், நாராயணன் ராஜ், பலவேசம், க.மாரியப்பன், இந்து ஆட்டோ முன்னணி கவி சண்முகம், எச்ஒய்எப் சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்