» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர் மரணம்: விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!
திங்கள் 11, நவம்பர் 2024 8:27:09 AM (IST)
தூத்துக்குடியில மீனவர் திடீரென மரணம் அடைந்துள்ள நிலையில், விசைப்படகு மீனவர்கள் இன்று (நவ.11) கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி மாதா கோவில் அருகில் உள்ள மணல் தெருவைச் சேர்ந்தவர் தாசன் மகன் பீட்டர் (62). மீனவரான இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மிஸ்வா என்னும் விசைப்படகில் நேற்று இரவு படுத்து தூங்கி உள்ளார். இன்று காலை கடலுக்கு செல்வதற்காக அவரை எழுப்பும் பொழுது சுமார் 04.45 மணி அளவில் அவர் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டார் என்று கூறியதால் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது சம்பந்தமாக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் எதிரொலியாக இன்று (நவ.11) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.