» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிற்சாலையில் வருமான வரித் துறையினர் சோதனை

வியாழன் 7, நவம்பர் 2024 8:52:56 AM (IST)

கோவில்பட்டியில் கருவாடு ஆலை அதிபர் அலுவலகம், வீடு மற்றும் தொழிற்சாலையில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் நிக்கோலஸ் மகன் அந்தோணி அரசாங்கம் மணி(51). இவர் சிவந்திபட்டி - தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறார். மேலும் தட்டார்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இவர் பல்வேறு இடங்களில் கருவாடு, கழிவு கருவாடுகளை மொத்தமாக வாங்கி, பொடியாக்கி கோழி தீவனத்திற்கு அனுப்பி வரும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சார் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார் .

இந்நிலையில் நேற்று இவரது ஆலை மற்றும் கோவில்பட்டி பழனியாண்டவர் கோயில் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சுமார் 10 பேர் நேற்று பிற்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஆலையில் பிற்பகல் சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory