» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மோட்டார் பைக்குகளுக்கு தீவைப்பு
புதன் 6, நவம்பர் 2024 10:57:53 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டிற்குள் நுழைந்து 2 மோட்டார் பைக்குகளுக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (50). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது வீட்டின் முன்பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்து இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததை பார்த்த மோகன்தாஸ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் ஒரு மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. 2 மோட்டார் சைக்கிள்கள் லேசான சேதம் அடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.