» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்!
புதன் 6, நவம்பர் 2024 8:02:17 AM (IST)
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் தினசரி பணி வழங்க வலியுறுத்தி 2-ஆவது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இவா்கள் காலை 5 மணிக்கு சென்று, இரவு 9 மணிக்குள் கரைக்கு வந்து விடுவா். இதன் காரணமாக, ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விசைப்படகு உரிமையாளா்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படகுகள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அவா்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சென்று வந்தனா். ஆனாலும் மீன்பாடு அதிகம் இல்லாததால் தினசரி குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்கு சென்று வந்தன.
இந்த நிலையில், தினசரி பணி வழங்கக் கோரி விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இப் போராட்டம் 2-ஆவது நாளாக நேற்றும் நீடித்தது.