» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பதியை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 5, நவம்பர் 2024 7:56:40 PM (IST)

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு ஆளித்தது.

கேரள மாநிலம் மூணாறு கோதமங்களம் பகுதியைச் சேர்ந்த தேவ சிங் (எ) தேவசியா (எ) சாக்கோ (60/13) மற்றும் அவரது மனைவி மேரி (50/13) ஆகியோர் கடந்த 2013 ஆம் வருடம் தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வந்து கடற்கரை அருகில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே குடிசை அமைத்து பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17‌.10.2013 அன்று மேற்படி கணவன் மனைவி தங்கியிருந்த இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியைச் சேர்ந்த அமச்சியார் மகன் செல்வம் (43/24) என்பவர் மேரியிடம் தவறாக பேசி தொந்தரவு செய்துள்ளார். இதனை மேரியும் அவரது கணவரும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மேற்படி மேரி மற்றும் அவரது கணவர் தேவசிங் (எ) தேவசியா (எ) சாக்கோ ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியதில் மேரி சம்பவ இடத்திலும் மேரியின் கணவர் 19.10.2013 அன்று மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி செல்வத்தை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன் இன்று (05.11.2024) குற்றவாளியான செல்வம் என்பவருக்கு ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் வித்து தீர்ப்பு வழங்கி மேற்படி தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் அவர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory