» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை!
புதன் 30, அக்டோபர் 2024 8:32:21 AM (IST)
தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.ஏ. பிரைட்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.ஏ. பிரைட்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் மகளிர் அணி இணை செயலாளர் சண்முககுமாரி, அவைத் தலைவர் தங்கமாரியப்பன், பொதுக் குழு உறுப்பினர் ராமேஸ்வரி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திருமலை தங்கம், பகுதி செயலாளர்கள் மாரிமுத்து, சின்னச்சாமி, ஜான் பெர்ணாண்டோ, மதன்குமார், அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் அகஸ்டின், அம்மா பேரவை ஹரிகரசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.