» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை ஜோர்: பட்டாசு, இனிப்பு கடைகளில் மக்கள் அலைமோதல்!

புதன் 30, அக்டோபர் 2024 3:48:25 PM (IST)



தூத்துக்குடியில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. புத்தாடைகள், பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்த நிலையில் இன்று தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது. 

தூத்துக்குடி பஜார் பகுதிகளில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இனிப்பு, பலகாரங்களை வாங்குவதற்கு மிட்டாய் கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். தங்களது வீடுகளுக்கும், நண்பர்களுக்கு கொடுப்பதற்கும் ½ கிலோ, 1 கிலோ என இனிப்பு வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் இனிப்பு கடைகள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 


மேலும் வெடி கடைகளில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. குழந்தைகள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கிச்செல்கின்றனர். இதே போல் பூக்கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory