» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2பேர் கைது : கார் பறிமுதல்
புதன் 30, அக்டோபர் 2024 6:35:39 PM (IST)
தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.70ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது வாகைக்குளம் ஜங்ஷன் அருகில் காரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியை சேர்ந்தவர்களான பண்டாரசாமி மகன் பரமசிவன் (30) மற்றும் ராமச்சந்திரன் மகன் பழனி (28) ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.70,000 மதிப்புள்ள 70 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூ.3,400 மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.