» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு!
புதன் 30, அக்டோபர் 2024 6:30:30 PM (IST)
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி ஆய்வு செய்தார்.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று (30.10.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் , ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 28 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பாக 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.
மேற்படி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சாரக காவல்துறை துணை தலைவர் பா. மூர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ரோந்து மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான தோட்டிலோவன்பன்பட்டி, சென்னம்மரெட்டிபட்டி மற்றும் கோடங்கிபட்டி ஆகிய சோதனை சாவடிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.