» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது!

புதன் 30, அக்டோபர் 2024 8:24:52 AM (IST)

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, லூசியா சந்திப்பு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த இசக்கிபாண்டி (28) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போன்று வேலவன் நகரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே கஞ்சா விற்பனை செய்ததாக ராஜகோபால் நகரை சேர்ந்த கொம்பையா (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

குற்றப்Oct 30, 2024 - 04:58:23 PM | Posted IP 162.1*****

பரம்பரை சட்டம் மீண்டும் வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory