» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் குழுவில் பல லட்சம் ரூபாய் மோசடி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:18:55 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பிஎஸ் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரது மனைவி உத்திரச்செல்வி. இவர் அந்த பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளராக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் அருந்ததியர் இன பென்களை குறி வைத்து வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களிடமிருந்து வங்கி பாஸ்புக், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு பணம் ஏறியவுடன் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார் .

வங்கி கணக்கு துவங்கிய பெண்களின் பெயரில் போலியாக மகளிர் சுய உதவி குழு என்று ஆவணங்கள் தயாரித்து வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனங்களில் வழங்கி அதன் மூலம் பல லட்ச ரூபாய் கனரா வங்கி, முத்தூட் உள்ளிட்ட தனியார் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிக் கொண்டு மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு வழங்காமல் முழு பணத்தையும் வங்கி பாஸ்புக் மற்றும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி உத்திரசெல்வி எடுத்துக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து வங்கியில் கடன் தொகை வாங்கியதற்கான மாதத்தவனை மற்றும் வட்டியை கட்டச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வங்கி நிர்வாகம் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் சார்பில் ஊழியர்கள் வீடு தேடி வந்து தொந்தரவு கொடுக்க துவங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை உத்திர செல்வி ஏமாற்றி மோசடி செய்ததை அறிந்து அவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். ஆனால் காவல்துறையினர் உத்தர செல்வியை விசாரணைக்கு அழைத்து எழுதி வாங்கி கொண்டு விட்டு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் உத்திர செல்வி ஆறுமுகநேரியில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பல லட்ச ரூபாய் பணத்துடன் தலைமுறை வாகி உள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தலைமறைவாக உள்ள உத்தர செல்வியை கைது செய்து தங்கள் பணத்தை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்னர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory