» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பயோ டீசல் லாரியுடன் பறிமுதல்: 2 பேர் கைது

வெள்ளி 18, அக்டோபர் 2024 12:21:48 PM (IST)



தூத்துக்குடியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறிவைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது‌ இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேற்றிரவு மீன் பிடித் துறைமுகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சோதனையிட்டபோது அதில், ரூ.8 லட்சம் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்தது. இதைடுத்து பயோ டீசல் பேரல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர் புரத்தைச் சார்ந்த கந்தன் மற்றும் கே.வி.கே நகர் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல, லாரியுடன் கைது செய்யப்பட்ட 2 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory