» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனமழை குறித்து தூத்துக்குடி மக்கள் அஞ்ச வேண்டாம் : வெதர்மேன்
வெள்ளி 11, அக்டோபர் 2024 9:00:39 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்று தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அந்த செய்தி தூத்துக்குடி மாவட்டத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நம் வானிலை பக்கத்தை தொடர்பு கொண்டு அதிக மழை பெய்யுமா என்று வினாக்களை எழுப்புகிறார்கள்.
பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும். ஆனால் மிக கனமழையோ அதிகனமழைக்கோ வாய்ப்பு இல்லை. கடலோர பகுதிகளை விட உள் பகுதிகளில் தான் நல்ல மழை பெய்யும். தற்போது வரை வடகிழக்கு பருவமழை துவங்கவில்லை என்பதால் கடலோர பகுதிகளில் அதிகமழையை எதிர்பார்க்க முடியாது. எனவே அச்சமின்றி பொதுமக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளவும் என்று தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார்.