» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு மீட்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!!

வெள்ளி 11, அக்டோபர் 2024 7:16:51 PM (IST)



தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் நிறுத்தியிருந்த வாகனத்தின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர், பைக்கின் பாகங்களை கழற்றி உள்ளே இருந்த சுமார் 2 அடி நல்ல நீளமுள்ள பாம்பை பிடித்தனர். 

பின்னர் அந்த பாம்பை, வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் சூடான இடங்களில் தஞ்சம் அடைவது இயல்பு. பைக் இன்ஜின் பகுதி சூடாக இருப்பதால் பாம்புகள் பைக்கில் புகுந்து கொள்ளும். அப்படித்தான் பைக்கில் அந்தப் பாம்பு பதுங்கியுள்ளது. ஆகவே, பைக்கை நிறுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory