» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேட்டையன் படத்தில் கோவில்பட்டி பள்ளி குறித்து அவதூறு: தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 12:22:18 PM (IST)
ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தில் கோவில்பட்டி பள்ளி குறித்து அவதூறான காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்து திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் தலைமையில் தங்கள் பகுதியையும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தக் காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும், இல்லை என்றால் ஒளிபரப்ப விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்
மக்கள் கருத்து
m.sundaramOct 11, 2024 - 01:41:02 PM | Posted IP 162.1*****
Bad culture is created in TN. There is no point in obstructing the screening of the movie. It is all caste culture. It should be nipped in the bud. We should not encourage such bad elements in the society.
ஏம்பாOct 11, 2024 - 04:59:50 PM | Posted IP 162.1*****