» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 3பேர் கைது!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:45:53 AM (IST)
தூத்துக்குடியில் டாஸ்மாக் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் சிவமுத்து ராஜா (43), இவர் பூபாலராயர் புரத்தில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்வின் (25), சாந்தி நகரை சேர்ந்த அருள்தாஸ் மகன் கிங்ஸ்டன் (40), சின்ன கடை தெருவை சேர்ந்த தாமஸ் மகன் பிரவீன் குமார் (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறு செய்தார்களாம்.
மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிவமுத்து ராஜாவை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் சிவமுத்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.