» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு : வாலிபர் கைது!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:39:49 AM (IST)
செய்துங்கநல்லூர் அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஆறுமுகம் (51), லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மெயின் ரோட்டில் தனது லாரியை நிறுத்திவிட்டு டயர்களை சோதனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை கட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.8ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டார்களாம்.
இது குறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஜான் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, நாங்குநேரியை சேர்ந்த சூர்யா மகன் ஜெயக்குமார் (20) என்பவரை கைது செய்தார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.