» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:01:16 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1250 கிலோ ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் வெள்ளப்பட்டி சோதனை சாவடி முன்பு வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 25 கிலோ வீதம் 50 மூடைகளில் 1250 கிலோ ரேஷன் இருந்தது. மேலும் இதனை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த ராமன் மகன் மணிகண்டன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.