» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி கரைஓரத்தில் வெள்ளதடுப்புச் சுவர் : வனத்துறை அனுமதி
வியாழன் 10, அக்டோபர் 2024 8:30:46 AM (IST)
புதுக்குடி தாமிரபரணி கரைஓரத்தில் மழை வெள்ளதடுப்புச்சுவர் கட்டுவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்தது. அப்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியில் கரை உடைந்து அருகிலுள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பலத்த ேசதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து புதுக்குடியில் தாமிரபரணி கரைஓரத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்க நீர்வளத் துறையினர் திட்டமிட்டனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு புதுக்குடியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மழைக்காலத்திற்கு முன்பாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வனச்சரகர் பிருந்தா தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் மழைவெள்ள தடுப்புச்சுவர் கட்டுவதற்கான தடையில்லா சான்று வழங்கினர். இதை தொடர்ந்துநேற்று முதல் தடுப்புச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.