» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் பார்வையிட பயிற்சி
புதன் 9, அக்டோபர் 2024 7:38:28 PM (IST)
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 5வதுபுத்தகத் திருவிழாவில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதில் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 5வது புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவில் டெலஸ்கோப்பில் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு டெலஸ்கோப்பில் தொலைதூர பொருட்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முத்துசாமி,முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் தொலைதூரப் பொருட்களை பார்வையிட பயிற்சி அளித்தனர்.
இதில் பள்ளி தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேசுவா,பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன், சஜின், சுபா, சில்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வருகை தந்து டெலஸ்கோப்பில் தொலைதூர பொருட்களை பார்வையிட்டு சென்றனர்.