» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு

புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது. 

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வாயிலாக வருகின்ற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (திங்கட்கிழமை) "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்" எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் பல்வேறு முக்கியமான நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், அலங்கார மீன்வளர்ப்பு உபகரணங்கள், அலங்கார மீன்களுக்கான உயிர் உணவுகள், நீர்த்தரக்கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், கண்ணாடித் தொட்டி அமைத்தல், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு கற்பிக்கப்பட உள்ளன. 

அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சுயதொழிலாக இதனை ஏற்று நடத்த முனைவோருக்கும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.300/- பயிற்சியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்யவும். 

பயிற்சி குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 8870389155, 8122382403, 9892045661 மற்றும் 9994450663 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும். நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர்  தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory