» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊதியம் வழங்க கோரி பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

புதன் 9, அக்டோபர் 2024 3:03:58 PM (IST)



தூத்துக்குடியில், செப்டம்பர் மாத ஊதியம் வழங்காத தமிழக அரசை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு 60% மாநில அரசு 40 சதவீதம் என நிதி ஒதுக்கி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணி புரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்து இடாத காரணத்தினால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.  இதன் காரணமாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. 

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 295 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய ஊதியத்தை தமிழக அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது இதன் காரணமாக பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது 

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள் ஊதியம் வழங்காத தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசு உடனே நிதி வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு  தங்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory