» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வியாபாரிகள் சங்க தலைவர் கடைக்கு தீ வைத்தவர் கைது!
புதன் 9, அக்டோபர் 2024 11:24:02 AM (IST)
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் கடைக்கு தீவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (65), இவர் பிரையன்ட் நகர் வியாபாரிகள் சங்க தலைவராக உள்ளார். மேலும் அங்கு பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மகாராஜன் (38) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் தேர்தலில் மீண்டும் வெற்றி செல்வன் வெற்றி பெற்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மகராஜன் நேற்று அவரது கடைக்கு சென்று அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பேப்பர் அட்டைகளை தீ வைத்து எரித்தாராம். இதில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
இந்த சம்பவம் குறித்து வெற்றி செல்வன் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து, மகாராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.