» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.10லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை!
புதன் 9, அக்டோபர் 2024 10:21:38 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீச் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த பொலிரோ பிக்அப் வேனை நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்ததில் தலா 25 கிலோ வீதம் 50 மூடைகளில் மொத்தம் 1250 கிலோ பீடி இலைகள் இருந்தது. அந்த பீடி இலைகளை இனிகோ நகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10லட்சம் ஆகும். பீடி இலைகளை வேனுடன் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றவர் யார்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்று இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிடிப்பட்ட பீடி இலைகள் மற்றும் பேனை சுங்கத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.