» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 11 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் : லாரி டிரைவர் கைது
புதன் 9, அக்டோபர் 2024 8:21:12 AM (IST)
தூத்துக்குடியில் லாரியில் கடத்திய 11,800 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெர்மல் நகர் விலக்கு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் கலப்பட டீசல் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியின் ஓட்டுநரான தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த சிவசக்தி ராஜ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், லாரியில் இருந்த சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 59 பேரல்களில் இருந்த சுமார் 11 ஆயிரத்து 800 லிட்டர் கலப்பட டீசலையும் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவசக்தி ராஜ் மற்றும் லாரி, கலப்பட டீசல் ஆகியவற்றை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.