» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2 சிறுவர்கள் கைது
புதன் 9, அக்டோபர் 2024 8:14:17 AM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து, 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்களைப் பார்த்ததும் அங்குள்ள மண்டபம் அருகே நின்றிருந்த 4 பேரில் இருவர் தப்பியோடினராம்.
மற்ற இருவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சிறுவர்கள் என்பதும், 1.25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரைத் தேடிவருகின்றனர்.