» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அண்ணா பல்கலை., மண்டல அளவிலான போட்டி: தூத்துக்குடி கல்லூரி முதல் பரிசை தட்டி சென்றது!
புதன் 9, அக்டோபர் 2024 7:59:00 AM (IST)
அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அளவிலான பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில். தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி முதல் பரிசை தட்டி சென்றது.
அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூறியான பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரியில் அக்டோபர் எட்டாம் தேதி தேதி அண்ணா பல்கலைக்கழகம் 18 ஆம் மண்டலங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் விருதுநகர் மேப்கோ பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, ராம்கோ டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் கல்லூரி, திருநெல்வேலி எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி St.மதர்தெரேசா பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி ஆகிய எட்டு கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியினை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி ஆன தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் பீட்டர் தேவதாஸ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட பூப்பந்து செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரிக்கும், நேஷனல் பொறியியல் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி முதல் பரிசினை தொடர்ந்து மூன்றாவது முறையாக தட்டி சென்றது. இரண்டாம் பரிசினை நேஷனல் பொறியியல் கல்லூரி ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மூன்றாம் பரிசு வென்றது.
பரிசளிப்பு விழாவில், பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் சரவணன் மற்றும் zonal secretary ரெஜிலின் கிருபா சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் ராஜா குமார் மற்றும் ஆசிரியர்கள், வெங்கல குமார் அருண்குமார் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.