» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 8:24:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப் பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம், ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும், 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

அவ்வகையில், முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவில் தென்காசி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 19.10.2024 அன்று குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலைப் போட்டிகள் அனைத்தும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் முன்பதிவு நடைபெறவுள்ளது. 

போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் (Birth Certificate) வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள்

1. பரதநாட்டியம் (செவ்வியல்) 

பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)

தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றம் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

3. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும்.

4. ஓவியம்

40x30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் , ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்

5. வயது விவரம் (1 . 6 . 2024 அன்று உள்ளபடி 16 வயது)

அ. 5 முதல் 8 வயது பிரிவு – 01.06.2016 முதல் 31.05.2019 வரை

ஆ. 9 முதல் 12 வயது பிரிவு - 01.06.2012 முதல் 30.05.2015 வரை

இ. 13 முதல் 16 வயது பிரிவு – 01.06.2008 முதல் 30.05.2011 வரை

மேலும், விவரங்களுக்கு 0462-2901890, 94877 39296 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory