» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 8:17:17 PM (IST)



திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதத்தில் உயர்த்திய வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது

40 மாத திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், உயர்திய வரிகளை திரும்ப பெற வலியுருத்தி, பொதுமக்கள் நலன் கருதி அதிமுக வின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உத்தரவிட்டிருந்தார் அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் குரூஸ்பர்னாந்து சிலை முன்பிருந்து சத்திரம் பஸ் ஸ்டாப் நோக்கி 100க் கணக்கானோர் திரண்டு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மனித சங்கிலியாக அணிவகுத்து திமுக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுற வங்கி தலைவர் இரா. சுதாகர் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரார் வக்கீல் மைக்கல் ஸ்டனிஸ் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், சிறுமாண்மை பிரிவு கே.ஜே. பிரபாகர், இளைஞர் பாசறை தனராஜ், பகுதி கழக செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டர் முத்து, தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, உட்பட பலர் கைகோர்த்து நின்று விடியா திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory