» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
செவ்வாய் 8, அக்டோபர் 2024 8:07:26 PM (IST)
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம், பிரையன்ட்நகர் பகுதிகளில் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட் நகர் 11ம் தெருவில் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதி, 10வது தெருவின் கிழக்கு தொடர்ச்சி முதல் லெவிஞ்சிபுரம் செல்லும் பகுதி, லெவஞ்சிபுரம் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, வட்ட செயலாளர்கள் சரவணன், சுரேஷ், மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.