» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பதிவு உரிமைச் சான்றுகள் பெறாத இல்லங்கள் நடத்த அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:48:41 PM (IST)
முதியோர் இல்லங்கள் பதிவுகள் மேற்கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இணையதளத்தில் கோரப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சான்றிதழ்கள் கட்டாயம் பதிவு செய்து கொள்ளுமாறு முதியோர் இல்லங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் பதிவு உரிமைச் சான்றுகள் (Certificate of Registration) வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட முதியோர் இல்லங்கள் பதிவு உரிமைச் சான்றுகளை பெற்றால் மட்டுமே மானியம் பெறவும், இல்லங்கள் நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து முதியோர் இல்லங்களும் https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.