» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எண்ணெய் வித்து திட்டத்தில் ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:42:20 PM (IST)

சமையல் எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கம் - எண்ணெய் வித்து பயிர்கள் 24 -25 திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள் மற்றும் சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும். ஆதார விதை மற்றும் சான்று விதை உற்பத்தி செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 மானியம், ஆதார விதை மற்றும் சான்றளிக்கப்பட்ட உயர் விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4000 மானியம், 

சூரியகாந்தி செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.4000 மானியத்தில் இடுபொருட்கள், நிலக்கடலை செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு எக்டேருக்கு ரூ.10000 மானியத்தில் இடுபொருட்கள், ஜிப்சம் விநியோகத்திற்கு ஒரு எக்டேருக்கு ரூ.750 மானியம், உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூ.300 மானியம, நிலக்கடலையில் நுண்ணூட்ட உரங்கள் விநியோகத்திற்கு ஒரு எக்டருக்கு ரூ.500 மானியம், 

உயிரியியல் பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.500 மானியம், நிலக்கடலையில் பயிறு வகை ஊடுபயிர் செய்ய ஒரு எக்டேருக்கு ரூ.1000 மானியம், அறுவடை மற்றும் அறுவடை பின்செய் பணிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.2500 மானியம் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல்களில் தரமான விதை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிட கூடுதலாக கிலோவிற்கு ரூ.25 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் விதை உற்பத்தியில் ஈடுபட அழைக்கப்படுகிறார்கள்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் முன் பதிவு செய்யலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின்படி வேளாண்மை திட்டங்கள் தொடர்பான கூகுள் விரிதாளில் பதிவு செய்யலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory